கிணத்துக்கடவு பகுதியில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

கிணத்துக்கடவு பகுதியில் விளை நிலங்கள்வழியாக உயர்மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கருத்துகேட்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-03-03 22:00 GMT
கிணத்துக்கடவு,

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகமும்பல்வேறு உயர்மின் அழுத்த மின்பாதை திட்டங்களை செயல் படுத்திவருகின்றன. அதன்படி புகலூரில் இருந்து கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலம் திருச்சூருக்கு உயர்மின்கோபுரங்கள் மூலமாக மின்சாரம் கொண்டுசெல்ல திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன்படி விளை நிலங்கள் பகுதியில் உயர்மின்கோபுரங்கள் (டவர்)அமைக்க திட்டமிடப்பட்டது. கிணத்துக்கடவு தாலுகாவில் காட்டம்பட்டி, ஆண்டிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், தாமரைக்குளம், கோவிந்தாபுரம், சூலக்கல் ஆகியபகுதிகளில் 22கிலோமீட்டர் தூரத்தில் சுமார் 56 உயர்மின்கோபுரங்கள் (டவர்)அமைக்கப்பட உள்ளது.

இதற்கு முதற்கட்டமாக விவசாயநிலங்களில் மஞ்சள் பெயிண்ட் மூலம் குறிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் தங்களது, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்தபணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதிமுதல் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் இது குறித்து விவசாயிகளுக்கு கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிணத்துக்கடவு தாசில்தார் விமலா தலைமைதாங்கினார்.தலைமையிடத்து துணை தாசில்தார் தணிகைவேல் வரவேற்றுபேசினார். கூட்டத்தில் விவசாயிகள் கூறிய தாவது:-

ஏற்கனவே வறட்சியால்நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் எங்களுக்கு சொந்தமானநிலத்தில் எங்கள் அனுமதியின்றி அளவீடுசெய்து குறியிட்டுள்ளனர். எதற்கு இப்படி செய்கிறீர்கள் என்றுகேட்டால் இதுமத்திய அரசுதிட்டம் இதைநீங்கள் எதிர்க்க கூடாது. இதை எதிர்த்தால் விபரீதத்தை சந்திக்கவேண்டியிருக்கும் எனமிரட்டுகின்றனர். எங்கள்நிலத்தில் எங்களது அனுமதியின்றிநுழைந்துவிட்டு எங்களையே மிரட்டுகின்றனர். வறட்சியால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்கள்விளை நிலத்தில் விவசாயம்சார்ந்த வேறு தொழில்களைதொடங்க மின்வசதிகேட்டு மின்சாரவாரியத்திடம்போனால் உங்கள் இடத்தின் அருகே உயர்மின்கோபுரங்கள் அமைக்கப்படுவதால் மின் இணைப்பு வழங்கமுடியாது என மறுக்கின் றனர்.

இதனால் நாங்கள் வேறு தொழில்களையும் செய்ய முடியாமல் சிரமத்தில் உள்ளோம். சிலருக்குஒரு ஏக்கர் 2 ஏக்கர்நிலம்தான் உள்ளது. அதுவும் முழுவதும் இந்த உயர்மின்கோபுரம் அமைக்கும்பகுதியிலேவருவதால் எப்படி குடும்பம் நடத்துவது? சிலரிடம் கூடுதல் இழப்பீடு தருகிறோம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர். எங்களது சொத்து பணம் அல்ல. காய்கறிபொருட்களை உற்பத்திசெய்யும் நிலம்தான்.

இது எங்களின் நிரந்தர சொத்து. இதைநாங்க ஒருபோதும் விட்டுகொடுக்கபோவதில்லை. விவசாயிகளை பாதிக்கும் இந்த உயர்மின்கோபுரங்கள் அமைக்கும்பணியை விட்டுவிட்டு விவசாயிகளைபாதிக்காத வகையில் தேசிய நெடுஞ்சாலைவழியாக பூமிக்குள் கேபிள் அமைத்து மின்சாரத்தைகொண்டு செல்லுங்கள். அதையும்மீறி உயர்மின்கோபுரங்களை விளைநிலங்கள் வழியாக அமைக்க திட்டமிட்டால் எங்களது உயிரைகொடுத்தாவது தடுத்துநிறுத்துவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து வேண்டாம் வேண்டாம் விளைநிலங்கள்பகுதியில் உயர்மின்கோபுரங்கள்வேண்டாம் என கோஷம் எழுப்பினார்கள். இதனால் கூட்டத்தில்பரபரப்பு ஏற்ப்பட்டது.

அவர்களை சமாதானப்படுத்திய கிணத்துக்கடவு துணை தாசில்தார் தணிகைவேல், நீங்கள் கூறிய கருத்துக்கள் மாவட்ட கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.

கூட்டத்தில், 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் இது குறித்து தமிழ்நாடுவிவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி கூறியதாவது:-

பவர்கிரிட் என்கிற பொதுத்துறை நிறுவனம் தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட இடங்களின் வழியாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு மின்சாரத்தை கொண்டு செல்கிறது. இந்த பணிகளை பெரிய கம்பெனிகளுக்கு வழங்கி உள்ளனர். அவர்கள் விவசாயிகளை மிரட்டி அனுமதியின்றி விளைநிலங்களுக்குள் புகுந்து மின்கோபுரங்களை அமைக்கும்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் மட்டும் 56 கிலோமீட்டர் தூரத்தில் 650 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. இந்த விவசாயிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இவர்கள் விவசாயத்தை நம்பிதான் உள்ளனர். இதனால் இந்த திட்டத்தை எதிர்த்து வருகிறோம். இந்தபணிகள் தொடர்ந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்