காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-03-03 22:30 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ குமார் தலைமை தாங்கி னார். மாநில பொதுக்குழு உறுப்பினர் உத்தமன், மாவட்ட துணை தலைவர்கள் அன்பானந்தம், பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராமானுஜம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தின் போது, வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்த நீரவ்மோடியை உடனே கைது செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை காலம் கடத்தாமல் உடனே அமைக்க தமிழக அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட கார்த்திக் சிதம்பரத்தை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் செய்தி தொடர்பாளர் சிவாஜி சேகர், வட்டார தலைவர்கள் ராஜா, செல்வமணி, வேணுகோபால், மகளிர் அணி பொறுப்பாளர்கள் கிரிஜா, ராணி, மாவட்ட தொழிற்சங்க தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்