மகிழ்ச்சியே ஆரோக்கிய மந்திரம்!
நாம் மகிழ்ச்சியாக இருப்பதும், பிறரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் ஒரு கலை.
ஏன், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? காரணம், மகிழ்ச்சியே ஆரோக்கியம் என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.
இதோ, இங்கே புள்ளிவிவரங்களாகப் பார்ப்போம்...
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு, எடை அதிகரிப்பு, ‘டைப் 2’ நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்குக் காரணமான மன அழுத்த ஹார்மோன் ‘கார்ட்டிசோல்’ குறைவாகச் சுரக் கிறது.
மகிழ்ச்சியின் விளைவாக ‘டோபாமைன்’ ஹார்மோன் சுரப்பினால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது.
ஆழ்ந்த உறக்கம் ஏற்படுகிறது, ‘இன்சோம்னியா’ போன்ற தூக்கப் பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன.
மகிழ்ச்சியாக இருப்பவர்களுடன் ஒப்பிடும்போது, மகிழ்ச்சியைத் தொலைத்தவர்களுக்கு ஜலதோஷம், நுரையீரல் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு 300 சதவீதம் அதிகம்.
மகிழ்ச்சியுடன் உறவாடுவோருக்கு சுயஒழுங்கு அதிகமாம். அதனால் அவர்கள் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
மகிழ்ச்சியான மனிதர்கள், சுமார் 47 சதவீதம் ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்று கிறார்கள் என்று, இங்கிலாந்து மருத்துவ இதழ் ஒன்று கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
மகிழ்ச்சியான மனநிலை கொண்டவர்கள், எலும்புகளை வலுப்படுத்தும், சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் வாய்ப்பு, 30 சதவீதம் அதிகமாக உள்ளது.
தாங்கள் மகிழ்ச்சியானவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக் கிறது.
மகிழ்ச்சியான நபர்களுக்கு ரத்த பிளாஸ்மா அடர்த்தி குறைவாக இருக்கிறது, எனவே இதயநோய் அபாயமும் குறைகிறது.
சந்தோஷமாக, எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு, சோககீதம் வாசிப்பவர்களை விட இதயநோய் வாய்ப்பு குறைவு.
முதியவர்களிலும், அவநம்பிக்கையில் புலம்புபவர்களை விட, சந்தோஷமாக, துடிப்புடன் இருப்பவர்களுக்கு இதயநோய் அபாயம் 77 சதவீதம் குறைகிறது.
எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களுக்கு ஆயுளில் சில ஆண்டுகள் கூடு கின்றன. மகிழ்ச்சியற்ற மனிதர்களைவிட மகிழ்வான நபர்கள் அதிக காலம் வாழ்கிறார்கள்.
தீவிரமான, நீண்டகால ஆரோக்கியப் பிரச்சினை இருப்பவர்களில், மகிழ்ச்சியான மனிதர்களுக்கு நிலை மேம்படும் வாய்ப்பு ஒன்றரை மடங்கு அதிகம்.
‘கீமோதெரபி’ போன்ற கடும் சிகிச்சைக்கு உள்ளாவோரில், குடும்பத்தினர், உற்றார், உறவினரின் ஆதரவு இருப்போர், குணமடையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
மகிழ்ச்சியாக இருப்பவர்கள், மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளப்படுபவர்கள், சர்க்கரை நோய் போன்றவற்றின் சவால்களை எளிதாகச் சந்திக்கிறார்கள்.
எளிய, இனிய கொள்கைகளைப் பின்பற்றி வாழ்வோர், மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருக்கின்றனர். மற்றவர்களையோ, உங்களையோ மதிப்பிடுவதைக் கைவிடுங்கள். அதேபோல, மற்றவர்களை மன்னிப்பதைப் போல உங்களையும் மன்னியுங்கள் என்கிறார்கள், மனநல ஆலோசகர்கள்.
ஆரோக்கியமாக இருப்பவர்கள், அதுபற்றி அலட்டிக்கொள்ளாத மற்றவர்களைவிட 20 சதவீதம் அதிகமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
பார்க்கும் பொருளை எல்லாம் வாங்கிக்குவிக்க நினைக்கும் தீவிர நுகர்வு மோகம், நம் மகிழ்ச்சிக்கு வேட்டுவைப்பதில் முக்கிய இடம் பிடிக்கிறதாம்.
தினமும் வெளிப்புறத்தில் 20 நிமிடமாவது சுறுசுறுப்பான பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு நேர்மறை எண்ணம் வளர்கிறது, சிந்தனை விரிவடைகிறது, ஞாபகத்திறன் கூடுகிறது.
மணமாகாதவர்களை விட மணமானவர்கள் 10 சதவீதம் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
மனநலமும் உடல்நலமும் ஒன்றுக்கு ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. எனவே மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பவர்கள், உடல்நல பாதிப்பால் முடங்கும் வாய்ப்புக் குறைவு.
எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போதும் கலகலப்பாக இருப்பவர்களின் நண்பர்கள் வட்டம் விரிவடைகிறது. உறவினர்கள் நெருங்கிவருகிறார்கள். எனவே, தேவைப்படும் நேரங்களில் ஆதரவுக் கரம் நீளும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
கொசுறு தகவல்: உலகிலேயே டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, நெதர்லாந்து மக்கள்தான் அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறார்களாம்.