கீரனூர் அருகே லாரி டிரைவர் மர்ம சாவு

கீரனூர் அருகே லாரிடிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-03-02 22:00 GMT
கீரனூர்,

சேலம் மாவட்டம் வானூர் கிராமத்தை சேர்நதவர் மாரியப்பன் (வயது 55). இவர் நேற்றுமுன்தினம் சேலத்தில் இருந்து கற்களை ஏற்றிக் கொண்டு அண்டக்குளத்திற்கு வந்து கொண்டிருந்தார். லாரி கீரனூர் அருகே வந்தபோது ஒரு இடத்தில் லாரியை நிறுத்தினார். பின்னர் லாரியில் வந்த கூலித் தொழிலாளர்கள் அருகில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்று விட்டனர். மாரியப்பன் லாரியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

பின்னர் குளத்தில் குளித்து விட்டு வந்த, தொழிலாளர்கள் மாரியப்பனை எழுப்பி உள்ளனர். ஆனால் அவர் எழுந் திருந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடையாளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மாரியப் பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மாரியப்பன் மர்மமான முறையில் எப்படி இறந்தார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மேலும் செய்திகள்