திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்த டாக்டர்கள்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள், கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

Update: 2018-03-02 22:00 GMT
திருச்சி,

தமிழக அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் மற்றும் பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 350-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், கோரிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டையை சட்டையில் அணிந்து கொண்டு பணிபுரிந்தனர்.

இதேபோல் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் பணி புரியும் பேராசிரியர்கள் மற் றும் ஈ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் பணிபுரியும் டாக்டர் கள் கோரிக்கைகள் அடங்கிய அட்டை யை அணிந்து பணியாற்றினர். மேலும் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் டாக்டர் அருளஸ்வரன், ஆலோசகர் ஸ்ரீஹரி ஆகியோர் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று டாக்டர்களிடம் போராட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி நோயாளிகளை பாதிக்காதவாறு டாக்டர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து அறவழிப்போராட்டமும் மற்றும் 8-ந் தேதி சென்னையில் டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்