சதுரங்கவல்லபநாதர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி
பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பூவனூரில் சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் நேற்றுமுன்தினம் மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் சதுரங்கவல்லபநாதர், கற்பகவல்லி அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. பின்னர் மாலையில் பவுர்ணமியையொட்டி கோவிலின் மேற்கு பிரகார மண்டபத்தில் உள்ள பிரதான விநாயகர், லட்சுமி நாராயணர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், அகத்தியருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதி முன்பு சிறப்பு யாகம் நடைபெற்றது. யாக பூஜைகளை தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு புனித நீரால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமுண்டீஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.