முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு
முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலரை பொறுப்பில் இருந்து விடுவித்து கலெக்டர் நடிவக்கை எடுத்துள்ளார்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 18 வார்டுகள் கொண்ட ஒரு பகுதியாகும். இங்கு சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சி அலுவலகத்தில் 14 நிரந்தர பணியாளர்களும், 4 தற்காலிக பணியாளர்களும் உள்ளனர். மேலும் துப்புரவு பணிகளுக்கு என 16 நிரந்தர துப்பரவு பணியாளர்களும், 24 தற்காலிக துப்பரவு பணியாளர்களும் உள்ளனர். பேரூராட்சி செயல் அலுவலராக இருந்தவர் மணிமொழியன்.
சமீப காலமாக பேரூராட்சியால் குப்பைகள் மற்றும் கழிவு பொருட்கள் சரிவர அகற்றப்படுவதில்லை. இதனால் நகரம் முழுவதும் ஆங்காங்கே சாலைகளில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மேலும் சாக்கடை கால்வாய்களையும் சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்க்கேட்டு ஏற்பட்டு வருவதாக தெரிகிறது. செயல் அலுவலர் மணிமொழியன் சரிவர அலுவலகத்திற்கு வராததால் அனைத்து பணிகளும் தொய்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து செயல் அலுவலர் மணிமொழியனை பொறுப்பில் இருந்து விடுவித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும், பேரளம் செயல் அலுவலர் செந்திலன் முத்துப்பேட்டைக்கு கூடுதலாக பொறுப்பு வகிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பான மாதாந்திர கூட்டங்கள் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 23-ந் தேதி நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டங்களுக்கு முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன் கலந்து கொள்ளவில்லை.
மேலும் மாவட்ட கலெக்டரால் நடத்தப்படும் இதர ஆய்வு கூட்டங்களிலும் கலந்து கொல்வதில்லை. உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வடகிழக்கு பருவமழை காலத்தில் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த போதும், கலெக்டர் முத்துப்பேட்டை நகர பேரூராட்சி பகுதிக்கு முகாமுக்கு செல்லும் நாட்களிலும் அவர் கலந்து கொள்வதில்லை. இந்த காரணங்களுக்காக மணிமொழியனை முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இப்பணியிடத்திற்கு பேரளம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் செந்திலனை கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.