தண்ணீர் குடித்த 2 மாடுகள் செத்தன
சூளகிரி அருகே தண்ணீர் குடித்த 2 மாடுகள் அடுத்தடுத்து செத்தன. அந்த தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மடம் செம்பரசனப்பள்ளியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். தினமும் வீட்டின் அருகில் திறந்த வெளியில் உள்ள தொட்டியில் மாடுகளுக்கு தண்ணீர் வைப்பது வழக்கம். இந்த நிலையில் சினையாக இருந்த 2 பசுமாடுகளும், நேற்று அந்த தண்ணீர் தொட்டியில் வந்து தண்ணீர் குடித்தன.
சிறிது நேரத்தில் 2 மாடுகளும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து செத்தன. இதை பார்த்த சகாதேவன் அதிர்ச்சி அடைந்தார். அவர் இது குறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். சகாதேவனுக்கும், அந்த பகுதியில் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அதனால் பழி வாங்கும் நோக்கத்தில் அவர் மாடுகள் குடிக்க கூடிய தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான மாடுகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.