பொதுப்பணித்துறை பணிநீக்க ஊழியர்கள் மணி அடித்து நூதன போராட்டம்
மீண்டும் பணி வழங்கக்கோரி பணி நீக்க ஊழியர்கள் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு மணி அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி,
கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக பொதுப்பணித்துறையில் பணியமர்த்தப்பட்ட 2 ஆயிரத்து 648 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தேர்தல் துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் அவர்கள் அனைவரும் தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
தற்போது புதுவை துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் அவர்கள் தங்களை அங்கு பணியில் அமர்த்தக்கோரி நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு கூடிய அவர்கள் மணி அடித்து நூதன போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்துக்கு பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், தமிழர் களம் அழகர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசன், லெனின் பாஸ்கர், ஷியாம்குமார், இளவரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.