காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் வட்டார காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் புட்டிரெட்டிப்பட்டியில் நடைபெற்றது.
தர்மபுரி,
கடத்தூர் வட்டார தலைவர் திருமலை விஸ்வநாதன் தலைமை தாங்கினார். வட்டார நிர்வாகிகள் ராமலிங்கம், சின்னசாமி, ஜானி, காசி, கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருணாகரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோவி சிற்றரசு கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
கடத்தூர் ஒன்றியத்தில் புதிதாக கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் உடனே தொடங்க வேண்டும். கடத்தூர் அரசு மருத்துவமனையை நவீனமாக்க வேண்டும். புட்டிரெட்டிப்பட்டியில் பொதுமக்கள் நலன் கருதி ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களிலும் பணியாளர்களுக்கு வேலை வழங்கவேண்டும்.
தென்கரைக்கோட்டை, ராமியனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். கிராமங்களில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்க வேண்டும், பொதியன்பள்ளம் அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் மதகுகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தையன், வட்டார தலைவர்கள் சிதம்பரம், சரவணன், பிரகாசம், மாவட்ட பொதுச்செயலாளர் சின்னத்தம்பி, மாவட்ட செயலாளர் வேலியப்பன், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் காவேரி, லிங்கேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் குமரவேல் நன்றி கூறினார்.