ஏரியூர் போலீஸ் நிலையத்தில் விவசாயி தீக்குளித்து தற்கொலை
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த விவசாயி ஏரியூர் போலீஸ் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஏரியூர்,
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள மஞ்சாரப்பட்டிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 36), விவசாயி. இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஆசைத்தம்பிக்கு கடன் தொல்லை இருந்ததாக தெரிகிறது. மேலும் மது குடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது. இதன் காரணமாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் பழனியம்மாள், கணவர் ஆசைத்தம்பியை பிரிந்து செல்லமுடி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் ஆசைத்தம்பி மனமுடைந்து காணப்பட்டார்.
மேலும் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அவர் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். ஆனால் இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆசைத்தம்பி அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு சென்று மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரிடம் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனாலும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ஆசைத்தம்பி மீண்டும் ஏரியூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என போலீசாரிடம் கேட்டுள்ளார். அதற்கு போலீசார் உரிய பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ஆசைத்தம்பி போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினார்.
பின்னர் மாலை பெட்ரோல் கேனுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்த ஆசைத்தம்பி அதனை வளாகத்தில் வைத்து விட்டு உள்ளே சென்றார். அங்கு தனது மனைவியை சேர்த்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர், போலீசாரிடம் கூறியுள்ளார். அதற்கு போலீசார், காலையில் தானே வந்து இது தொடர்பாக கூறிவிட்டு சென்றாய், ஏன் மீண்டும் வந்து தொந்தரவு செய்கிறாய்? என கேட்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்து வெளியே வந்த ஆசைத்தம்பி தான் கொண்டு வந்த பெட்ரோல் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதனால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் மண்ணை எடுத்து ஆசைத்தம்பி மீது போட்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏரியூர் போலீஸ்நிலையத்திற்கு அடுத்த கட்டிடத்தில் தான் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இருப்பினும் அங்குள்ள டாக்டர்களை, போலீசார் வரவழைத்து ஆசைத்தம்பி இறந்துவிட்டாரா? என பரிசோதனை கூட செய்யவில்லை என கூறப்படுகிறது. சிறிது நேரத்துக்கு பின்னர் ஆசைத்தம்பியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியை சேர்த்து வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி அடைந்த விவசாயி போலீஸ் நிலையத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.