பொன்னேரி அருகே சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
பொன்னேரி அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொன்னேரி,
பொன்னேரியை அடுத்த சின்னகாவனம் கிராமத்தில் சாலையின் குறுக்கே நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத்துறையினரால் பள்ளம் தோண்டி அதில் பெரிய அளவிலான சிமெண்டால் ஆன குழாய் பதிக்கப்பட்டது. அந்த பள்ளத்தில் ஜல்லி எதுவும் கொட்டாமல் மண்ணை மட்டும் போட்டு நிரப்பி உள்ளனர்.
நேற்று காலை அந்த வழியாக சென்ற வாகனங்களால் மண் கீழே இறங்கி பெரிய அளவிலான பள்ளமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை சீரமைக்கக்கோரி அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.