குக்கிராமங்களில் நேரடியாக குப்பை சேகரிக்கும் திட்டம்
கோத்தகிரி பகுதியில் உன்னத உதகை திட்டத்தின் கீழ் குக்கிராமங்களில் நேரடியாக சென்று குப்பை சேகரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது என்று வட்டார வளர்ச்சி அதிகாரி கூறினார்.;
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த உன்னத உதகை எனும் திட்டத்தை மாவட்ட கலெக் டர் இன்னசென்ட் திவ்யா சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தினார். அதன்படி குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்கைகளாக தரம் பிரிக்கப்படும். மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு சாலை போடுவதற்கு தாருடன் சேர்த்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் வகையில் போதிய இட வசதி உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ள பகுதிகளுக்கு அருகில் குழிகள் வெட்டப்பட்டு மக்கும் குப்பைகளை அந்த குழிகளில் கொட்டி இயற்கை உரமாக மாற்றவும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை வீடு தோறும் சென்று சேகரிக்கும் தூய்மை காவலர்களிடம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரியை குப்பையில்லா தூய்மையான மாவட்டமாக மாற்ற மாவட்ட கலெக்டரால் உன்னத உதகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 கிராம ஊராட்சிகளில் சேரிக்கப்படும் குப்பைகளை லாரிகள் மூலம் எடுத்து வந்து மறுசுழற்சி செய்ய புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி குஞ்சப்பனை ஜக்கனாரை மற்றும் கொணவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டகம்பை பகுதிகளில் மாதத்தின் 2-வது மற்றும் 4-வது வெள்ளிக்கிழமைகளிலும், நெடுகுளா ஊராட்சியில் அனைத்து திங்கள், புதன் மற்றும் வியாழக்கிழமையிலும், நடுஹட்டி ஊராட்சியில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும், கொணவக்கரை ஊராட்சியில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் குப்பைகள் சேகரிக்கப்படும்.
அரக்கோடு மற்றும் கடினமாலா ஊராட்சிகளில் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமையும், தேனாடு ஊராட்சி பகுதிகளில் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், கோடநாடு ஊராட்சியில் மாதத்தின் முதல் 3 வெள்ளிக்கிழமைகளிலும், கெங்கரை ஊராட்சியில் மாதத்தின் அனைத்து நாட்களிலும் ஞாயிற்றுக்கிழமை தவிர குப்பை வாகனங்கள் மூலமாக தூய்மை காவலர்கள் மக்காத குப்பைகளை சேகரிக்க உள்ளனர்.