வெடிகுண்டு மிரட்டல்: கணவரை போலீசில் சிக்க வைக்க முயன்ற 2-வது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
நக்சலைட்டு பெயரில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கணவரை போலீசில் சிக்க வைக்க முயன்ற 2-வது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு,
நக்சலைட்டு பெயரில் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கணவரை போலீசில் சிக்க வைக்க முயன்ற 2-வது மனைவி, கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை சிக்க வைக்க சதி செய்தது விசாரணையில் அம்பலமானது.
போலீசில் சிக்க வைக்க திட்டம்
பெங்களூரு வடேரஹள்ளியில் வசித்து வருபவர் பிரகாஷ் பட்டீல். ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி மது. இந்த நிலையில் பிரகாஷ் பட்டீல், வீணா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். வீணா வித்யாரண்யபுராவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு(2017) டிசம்பர் மாதம் மோசடி வழக்கு ஒன்றில் பிரகாஷ் பட்டீல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், வீணாவுக்கும், வீட்டு அருகே வசித்து வரும் ஸ்ரீதர் (வயது 23) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. சிறையில் இருந்து வந்த பிரகாஷ் பட்டீலுக்கு, வீணாவின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. கள்ளக்காதலை அவர் கண்டித்துள்ளார். இதனால் பிரகாஷ் பட்டீலை போலீசில் சிக்க வைக்க வீணாவும், அவருடைய கள்ளக்காதலன் ஸ்ரீதரும் திட்டம் தீட்டினர்.
வெடிகுண்டு மிரட்டல்
அதன்படி, பிரகாஷ் பட்டீலின் செல்போனை பயன்படுத்தி வீணாவும், அவருடைய கள்ளக்காதலன் ஸ்ரீதரும் வித்யாரண்யபுரா போலீசுக்கு போன் செய்து விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்து உள்ளனர். மேலும் அவர்கள் பிரகாஷ் பட்டீலை நக்சலைட்டு என்றும் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக வித்யாரண்யபுரா போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதலை கண்டித்ததால் பிரகாஷ் பட்டீலை போலீசில் சிக்க வைக்கும் நோக்கத்தில், அவருடைய செல்போனில் இருந்து போன் செய்து நக்சலைட்டு பெயரில் வீணாவும், ஸ்ரீதரும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அம்பலமானது. இதுதொடர்பாக வீணா, அவருடைய கள்ளக்காதலன் ஸ்ரீதர் ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.