பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது திருப்பூர் மாவட்டத்தில் 25,097 பேர் தேர்வு எழுதினார்கள்
பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் 25,097 பேர் தேர்வு எழுதினார்கள்.
திருப்பூர்,
மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று தொடங்கியது. திருப்பூரில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் தங்களுக்குள் ஆயிரம் கனவுகளை தேக்கி வைத்துக்கொண்டு, காலை 8 மணிக்கே வீட்டில் இருந்து புறப்பட்டு கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
இதையொட்டி திருப்பூர் வீரராகவபெருமாள் கோவிலில் உள்ள ஹயக்ரீவர் சன்னிதியில் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்து ஹயக்ரீவரை மனமுருக வணங்கினர். தேர்வு எழுத போகும் தங்கள் குழந்தைகளுக்காக பெற்றோரும் பூஜை செய்து வழிபட்டனர்.
அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று வேண்டிக்கொண்ட மாணவ-மாணவிகள் பின்னர் பள்ளிக்கு சென்றனர். தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பாக பள்ளியின் முன்புறம் அமர்ந்து தங்கள் நண்பர்களுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். அத்துடன் தாங்கள் படித்த பாடங்களில் உள்ள முக்கியமான வினாக்களுக்கான விடைகளை கடைசியாக ஒரு முறை படித்து பார்த்துக்கொண்டனர். அத்துடன் தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன் மாணவ-மாணவிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
சரியாக காலை 10 மணிக்கு முதல் மணி அடிக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. அதை படித்து பார்க்க 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. பின்னர் விடைத்தாளின் முகப்புத்தாளில் உள்ள மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளனவா? என்பதை சரிபார்க்க 5 நிமிடங்கள் தரப்பட்டது. அதைதொடர்ந்து சரியாக காலை 10.15 மணிக்கு தொடங்கிய தமிழ் முதல்தாள் தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.
திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி உடனிருந்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் முதல்தாள் தேர்வை எழுத 24,819 மாணவ-மாணவிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் 24,581 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 238 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதே போல் தமிழ் முதல்தாள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 582 தனித்தேர்வர்களில் 516 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 66 பேர் தேர்வு எழுத வரவில்லை. அந்த வகையில் நேற்று நடைபெற்ற தேர்வை 25,097 பேர் எழுதினார்கள். 304 பேர் தேர்வு எழுத வரவில்லை.
திருப்பூர் மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 38 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதினார்கள். இவர்களில் 18 பேர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வை எழுதினார்கள். இவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது.
தேர்வில் எந்த வித முறைகேடான செயல்களும் நடைபெறவில்லை என்றும், தேர்வு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது என்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி தெரிவித்தார். மாவட்ட கல்வி அதிகாரி சித்ரா, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி கனகமணி ஆகியோரும் பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர், மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். தனித்தேர்வர்கள் 40,686 பேர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2,942 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. கண் பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டன. இதுபோன்றவர்கள் 2,380 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். அவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்பட்டது.
காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் ஆங்காங்கே திடீரென தேர்வு மையங்களை ஆய்வு செய்தனர். கரூர், திருச்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று 10 பேர் காப்பி அடித்ததாக பிடிபட்டனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் 2-வது தாள் தேர்வு நடைபெறுகிறது. பிளஸ்-2 தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி முடிவடைகிறது.