ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாவு
ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதியதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரிதாபமாக இறந்தார்.;
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 47). மாங்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் செம்பட்டி விடுதியில் இருந்து நம்பன்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். நம்பன்பட்டி முருகன்கோவில் அருகே சென்ற போது, மாங்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த துரைராஜ்(48) ஓட்டிவந்த மொபட் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பன்னீர் செல்வம் படுகாயமடைந்தார்.மேலும் துரைராஜ் காயமடைந்தார்.இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் செம்பட்டுவிடுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் நேற்று இறந்தார். துரைராஜ் ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து செம்பட்டு விடுதி போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வரு கின்றனர்.