ஆதிகருவண்ணராயர் கோவில் மாசிமக திருவிழா
பவானிசாகர் தெங்குமரஹடா வனப்பகுதியில் ஆதிகருவண்ணராயர் கோவில் மாசி மக திருவிழாவையொட்டி பக்தர்கள் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
பவானிசாகர்,
பவானிசாகர் வனச்சரகம் தெங்குமரஹடா வனப்பகுதியில் உள்ள கெஜஹட்டி கணவாய்மலையில் ஆதிகருவண்ணராயர், பொம்ம தேவியார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பவுர்ணமி அன்று மாசிமக பொங்கல் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 22-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து பக்தர்கள் மோயாற்றுக்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று பொங்கல் விழா நடந்தது. விழாவில் ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர்.
மேலும், திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான கிடாக்களை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோவில் வளாகத்தில் தங்கியிருந்து அங்கேயே சமைத்து உறவினர்களுக்கு விருந்திட்டு மகிழ்ந்தனர். கோபி, அந்தியூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கோவை, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனி லாரி மற்றும் பஸ்கள் மூலம் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தனர்.
கோவில் வனப்பகுதியில் உள்ளதால் காராச்சிகொரை வனச்சாவடியில் வனத்துறையினரின் சோதனைக்கு பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘ஆண்டுக்கு ஒருமுறை மாசிமகம் திருவிழாவிற்கு மட்டுமே இந்த கோவில் அமைந்துள்ள வனப்பகுதிக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. விழாவையொட்டி இதுவரை 700 வாகனங்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து உள்ளனர். மேலும் வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை’ என்றனர்.
விழாவையொட்டி பவானிசாகர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.