பிளஸ்-2 தேர்வு தொடங்கியது: 21,053 மாணவ, மாணவிகள் எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 தேர்வை, 21 ஆயிரத்து 53 மாணவ-மாணவிகள் எழுதினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தொடங்கிய பிளஸ்-2 தேர்வை, 21 ஆயிரத்து 53 மாணவ-மாணவிகள் எழுதினர்.
பிளஸ்-2 தேர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 9 ஆயிரத்து 233 மாணவர்கள், 11 ஆயிரத்து 820 மாணவிகள் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 53 பேர் பிளஸ்-2 தமிழ் முதல்தாள் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்கள் 260 பேரும் தேர்வு எழுதினார்கள். தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 13 ஆயிரத்து 674 பேரும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 379 பேரும் தேர்வு எழுதினர்.
இதற்காக தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களும், கோவில்பட்டி கல்வி மாட்டத்தில் 26 தேர்வு மையங்கள் ஆக மொத்தம் 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மாற்றுத்திறனாளி மாணவர்கள் 34 பேர் தேர்வு எழுதினர். இதில் பார்வையற்றவர்கள் மற்றும் கை பாதிக்கப்பட்டு எழுத முடியாத 20 மாணவர்கள் மாற்று ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினர்.
பறக்கும் படை
முன்னதாக, நேற்று காலையில் தேர்வுக்கான வினாத்தாள் பலத்த பாதுாகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 74 பேரும், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் 17 பேரும், பறக்கும் படை உறுப்பினர்கள் 160 பேரும், அறை கண்காணிப்பாளர்கள் 1,197 பேரும் பணியாற்றினர்.
மேலும் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பார்வையிட்டார். அங்கு மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? மாணவர்கள் இடையூறு இல்லாமல் தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், நேர்முக உதவியாளர் சங்கரய்யா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.