மினிவேன் மோதி பள்ளி மாணவன் பரிதாப சாவு டிரைவர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மினிவேன் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது தொடர்பாக மினிவேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பொம்மிடி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள குண்டல்மடுவு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் அலுவலக பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களுடைய மகன் கெவின்லோகேஷ் (வயது 8). இவன் சுரேஷ் வேலை செய்யும் அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு பஸ்சில் கெவின்லோகேஷ் வீட்டின் அருகே வந்து இறங்கினான். அப்போது தமிழ்செல்வி, தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கெவின்லோகேஷ் முன்னால் சென்று கொண்டிருந்தான். தமிழ்செல்வி பின்னால் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மினிவேன் எதிர்பாராதவிதமாக கெவின்லோகேஷ் மீது மோதியது. இதில் அவன் பலத்த காயம் அடைந்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வி மகனை மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கெவின்லோகேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போது மாணவனின் தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கெவின்லோகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிவேன் டிரைவரான சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாராபுரத்தை சேர்ந்த ராஜா (24) என்பவரை கைது செய்தனர். மினிவேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.