சரக்கு-சேவை வரி தாக்கல் செய்ய காலஅவகாசம் வணிகவரித்துறை இணை ஆணையாளர் தகவல்

சரக்கு-சேவை வரி குறித்த தகவல்களை தாக்கல் செய்ய காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்று வணிகவரித்துறை இணை ஆணையாளர் சுசீல்குமார் தெரிவித்து உள்ளார்.

Update: 2018-03-01 20:30 GMT
நெல்லை,

சரக்கு-சேவை வரி குறித்த தகவல்களை தாக்கல் செய்ய காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்று வணிகவரித்துறை இணை ஆணையாளர் சுசீல்குமார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சரக்கு மற்றும் சேவை வரி


சரக்கு மற்றும் சேவை வரி நமது மாநிலத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. வரி செலுத்தக்கூடியவர்கள் அனைவரும் மாதாந்திர நமூனாவை ஒவ்வொரு வரிக்காலத்திற்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 20-ந் தேதிக்குள் உரிய வரித்தொகையுடன் www.gst.gov.in இணையதளத்தில் தாக்கல் செய்யவேண்டும். உரிய நாளில் தாக்கல் செய்யாவிட்டால் தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் தாமதக்கட்டணத்துடனே தாக்கல் செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

தொலைபேசி எண்

தொகுப்பு முறையில் வரி செலுத்துவோர் ஒவ்வொரு காலாண்டு முடிந்த பிறகும் வருகிற 18-ந் தேதிக்குள் உரிய வரித்தொகையுடன் காலாண்டு நமூனாவை இணையதளத்தின் மூலம் தாக்கல் செய்யவேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி பதிவு எண் பெற்றவர்கள் அனைவரும் உரிய நமூனாக்களை இணையதளம் மூலம் தாக்கல் செய்யவேண்டும். இதற்கு காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. காலதாமத கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ.20, ரூ.50-ம், அதிகபட்சமாக தாமதகட்டணம் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படும்.

இந்த வரி செலுத்துவது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் 0462-2574348 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்