திரையுலகின் முதல் ‘சூப்பர் ஸ்டார்’ தியாகராஜ பாகவதர்
தமிழ்த் திரையுலகின் முடிசூடா வேந்தர், ஏழிசை மன்னர் என்று போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் பிறந்தநாள் இன்று (மார்ச் 1).;
கர்நாடக சங்கீதத்துக்கு ஒரு தியாகராஜர் என்றால், திரை இசைக்கு ஒரு தியாகராஜ பாகவதர். தமிழ் தியாகராஜர் என்று அழைக்கப்பட்ட பாபநாசம் சிவனின் பாட்டுகளுக்கும், ராகங்களுக்கும், வர்ண மெட்டுக்களுக்கும், ஜி.ராமநாதன் இசையமைத்த பாடல்களுக்கும் உயிர் கொடுத்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவரை எம்.கே.டி. என்றும் அழைத்தார்கள்.
1930-ம் ஆண்டு காலக்கட்டத்தில் பாகவதர் பாட்டுப்பாடி நடித்தார். சங்கீதம் ஆதிக்கம் செலுத்திய அந்த சமயத்தில் தன்னுடைய வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டார். பாகவதர் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து பாடல்கள் பாடியப் பிறகு, கர்நாடக சங்கீதத்தில் புகழ்பெற்ற பாடகர்களெல்லாம் காணாமல் போய்விட்டார்கள். அவர் அடித்தட்டு மக்களை கவர்ந்துவிட்டார். மோகன ராகம் தொடுத்த பாகவதரின் உடலும் மோகனமாக இருந்தது.
எம்.கே.டி.யின் காலடிப்பட்ட மண்ணை எடுத்து பல ரசிகர்கள் பூஜையில் வைத்தார்கள். அவரது சிகை அலங்காரம் பிரபலம் ஆனது. வாலிபர்கள் பலரும் அவரைப் போன்று சிகை அலங்காரம் வைத்துக்கொண்டார்கள். முடித்திருத்தும் நிலையங்களில், ‘இங்கு பாகவதர் கிராப் வெட்டப்படும்’ என்ற வாசகத்தோடு, அவரின் புகைப்படம் தொங்கவிடப்பட்டு இருந்தது.
பாகவதர் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான திருச்சிக்கு செல்கிறார் என்றால், இடையில் இருக்கும் அத்தனை ரெயில் நிலையங்களிலும் ரசிகர்கள் குவிந்துவிடுவார்கள். சில ஊர்களில் நடு இரவில் கூட ஆர்வத்தில் அவர் வரும் ரெயிலை மறித்து விடுவார்கள். மகாத்மா காந்திக்கு பிறகு இப்படியொரு வரவேற்பு பாகவதருக்கு மட்டுமே இருந்தது.
பாகவதர் 1934-ம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அந்த படத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளம். அதை அவர் கேட்டு வாங்கவில்லை. அவர்களாகவே கொடுத்தார்கள். படிப்படியாய் உயர்ந்தார். திருநீலகண்டர் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ.11 ஆயிரம் ஆகும். அன்றைக்கு தியாகராய நகரில் ஒரு கிரவுண்ட் நிலத்தின் விலை ரூ.100 தான். அப்படியென்றால், இன்றைய மதிப்பில் அவர் வாங்கிய சம்பளத்தை கணக்குப்போட்டு பாருங்கள்.
1930-ம் ஆண்டு முதல் 1944-ம் ஆண்டு வரை இந்தியாவில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இருந்தார்கள். ஒருவர் வடநாட்டில் இருந்த சைகல். இன்னொருவர் தென்னகத்தில் இருந்த எம்.கே.தியாகராஜபாகவதர். ஆனால் சைகல் மனம் விட்டு சொன்னபோது, ‘இந்தியாவின் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர்தான். நானில்லை’ என்றார்.
எம்.கே.டி. மொத்தம் 15 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் 9 இமாலய வெற்றி பெற்றன. அதிலும், 1944-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி அவர் நடித்த ‘ஹரிதாஸ்’ என்ற திரைப்படம் வெளியானது. அந்த படத்தில், ரோமாபுரியில் வாழ்ந்த ஜூலியஸ்சீசரின் வெள்ளைக்குதிரை போல ஒரு வெள்ளைக்குதிரையில் அவர் பவனி வந்தார். படம் முழுவதும் 18 பாடல்கள். கிடத்தட்ட 110 வாரங்கள் படம் ஓடியது. மூன்று தீபாவளிக் கண்ட ஒரே திரைப்படம் என்ற புகழை அந்த திரைப்படம் பெற்றது. இதனால் பாகவதர் தொடமுடியாத உயரத்துக்கு சென்றார். அவருடைய படத்தை பார்க்க தியேட்டரில் கூட்டம் கூடியதை போல பாகவதரின் வீட்டு முன்பு தயாரிப்பாளர்கள் கூடினார்கள். அவரின் சம்பளமும் கூடியது. அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்க தொடங்கினார்.
எம்.கே.டி.யின் திரைப்படங் களில் வந்த, கிருஷ்ணா முகுந்தா முராரே, உன்னை அல்லால், நீலகண்டா, ஞானக்கண் இருந்திடும் போதினிலே, பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல், மன்மத லீலையை வென்றார் உண்டோ, தீன கருணாகரனே நடராஜா, ராஜன் மகராஜன், வதனமே சந்திரபிம்பமோ போன்ற பாடல்கள் அவரின் புகழை உயர்தின.
அவர் 110 பவுனில் செய்யப்பட்ட தங்கத் தட்டில் தான் சாப்பிடுவார். துணி நெய்யும் மில்லில் இவருக்கென்று வேட்டிகள் தயார் செய்து கொடுத்தார்கள். வெற்றிலை பெட்டியும், எச்சில் துப்பும் கூஜாவும் வெள்ளியிலும், விலை உயர்ந்த உலோகத்திலும் வைத்திருந்தார். அந்த காலங்களிலேயே ஒரு கச்சேரியில் பாட ஆயிரம் ரூபாய் வாங்கி இருக்கிறார்.
அன்றொரு நாள், இரண்டாம் உலகப்போரின் செய்திகளைக் கேட்பதற்காக ரேடியோ முன்பு கூடியிருந்த கூட்டம் பாகவதரைப் பற்றிய அந்த செய்தியைக் கேட்டதும் உறைந்துபோனது. லட்சுமிகாந்தனின் கொலை வழக்கில் டி.கே.தியாகராஜபாகவதர் கைது செய்யப்பட்டார் என்பதுதான் அந்த திடுக்கிடும் செய்தி. 30 மாத சிறை வாசத்துக்குப் பிறகு பாகவதர் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார்.
களையிழந்த முகம், கண்களில் கருவளையம், 37 வயது தான் ஆகி இருந்தது அவருக்கு. தவமுடிகள் கொட்டி இருந்தன. பொன்னிறமான அந்த அழகிய உடலில் தோற்றப்பொலிவு இல்லை. வாடி இருந்தது. முன்பு போல பாகவதரை பார்க்க நெருக்கியடித்துக்கொண்டு ஓடிவரும் ரசிகர்கள் கூட்டத்தை காணவில்லை. காலம் மாறிவிட்டது. மக்கள் வாழ்வுநிலையும், மனநிலையும், ரசனையும் மாறிவிட்டது.
மறுநாள் காலையில் இருந்தே தயாரிப்பாளர்கள் வீடு தேடி வரத் தொடங்கினார்கள். பாகவதர் ஜெயிலுக்குப் போனதும் அட்வான்ஸ் கொடுத்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓடிப்போன பட அதிபர்களும் வந்திருந்தார்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளில் உலகத்தை புரிந்து கொண்டேன். சினிமா உலகத்தை பற்றியும் நன்றாக தெரிந்து கொண்டேன். இனிமேல் சினிமாவில் நடிக்கும் எண்ணம் எனக்கில்லை. அடிப்படையில் நான் ஒரு சங்கீத வித்வான். இனி கச்சேரிகளில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறேன் என்று தெரிந்தவர்களிடம் கூறினார். மனம் நொந்துபோன பாகவதர் சங்கீதக் கச்சேரிகள் மூலம் நிம்மதியாக வாழ்நாளை கழித்து விடலாம் என்று முடிவெடுத்திருந்தார்.
சினிமா உலகை விட இசையுலகம் மாறி இருந்தது. 1940-களில் இருந்து கச்சேரி நடத்தாததால் பாகவதர் மீது இசை பிரியர்கள் கோபத்தில் இருந்தார்கள். இசையுலகம் அவரை புறக்கணித்தது. ஜெயிலுக்கு போனவரை சபாவுக்குள் அனுமதிக்க முடியாது என்றனர். ஏகப்பட்ட பண நெருக்கடியில் இருந்த பாகவதருக்கு உடல் நிலையும் மிகவும் பாதிக்கப்பட்டது. கடைசி காலங்களில் அவருடைய கண்பார்வை பறிபோனது.
சினிமா உலகம் பாகவதரின் நிலையை கண்டு பரிதாபப்பட்டது. அவருக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்தார்கள். சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்த பாகவதர் எல்லாவற்றையும் மறுத்து விட்டார். பிறகு அங்கிருந்து கிளம்பி தஞ்சாவூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டார். நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சென்று, ‘உங்களுக்கு கனகா அபிஷேகம் செய்கிறேன். நீங்கள் சென்னைக்கு வாருங்கள்’ என்று அழைத்தார். அதற்கு பாகவதர், ‘ராஜேந்திரா நான் பார்க்காத கனகா அபிஷேகமா?’ என்று சொல்லி சென்னைக்கு வர மறுத்துவிட்டார்.
1-11-1959 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை பொதுமருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் மரணம் அடைந்தார் என்று ரேடியோவில் சொன்னார்கள். தன்னுடைய 49 வயதிலேயே அவர் இறந்தார். முன்னதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி தெரிந்தும் சினிமாக்காரர்கள் யாரும் சென்று அவரை பார்க்காததும், அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட பின்பும் கூட மருத்துவமனைக்கு அஞ்சலி செலுத்த யாரும் வராததும் வேதனையே.
தனது கந்தர்வகான குரலால் லட்சக்கணக்கான உள்ளங்களை கட்டிப்போட்ட அந்த ஏழிசை மன்னனின் உடல் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
- நடிகர் ராஜேஸ்