மணப்பாறை நகராட்சியில் வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

மணப்பாறையில் நகராட்சி வரி உயர்த்தப் பட்டதை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-02-28 23:00 GMT
மணப்பாறை,

மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் கீதா ஆ.மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மணப்பாறை நகராட்சியில் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ள வீட்டு வரியை ரத்து செய்ய வேண்டும். சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

வரி உயர்வை திணிக்க கூடாது. பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. சாக்கடைகள் அள்ளப்படுவதில்லை. முறையான குடிநீர் கிடைப்பதில்லை. கொசு மருந்து அடிப்பதில்லை உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கண்டன கோஷங் களை எழுப்பினர். அடிப்படை வசதியில்லாத பொழுது மக்கள் ஏன் வரி செலுத்திட வேண்டும் என்று கேள்வி எழுப்பி உடனடியாக கோரிக்கைகளை சரிசெய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் பன்னபட்டி கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் சின்னடைக்கன், செல்வராஜ், தலைமைக்கழக பேச்சாளர் துரை.காசிநாதன், நிர்வாகிகள் விண்மதி ஐ.எஸ்.வினோஜ், பாலசுப்ரமணியன், பொறியாளர் சபாபதி, வக்கீல் துரை அழகிரி, ரீவைண்டிங் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தி.மு.க.வினர் வந்த போது நகராட்சி அலு வலகத்தின் வெளிப்புற கதவு பூட்டப்பட்டது.

மேலும் செய்திகள்