ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லாதது ஏன்? சசிகலா மீது அமைச்சர் குற்றச்சாட்டு
ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லாதது ஏன்? என்று சசிகலா மீது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.
கரூர்,
கரூர் நகர அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கரூர் உழவர்சந்தை அருகே நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை நடத்தி வருகின்றனர். இந்த ஆட்சியில் என்ன குறை கண்டீர்கள். துரோகிகள் மக்கள் மத்தியில் விமர்சனங்களை பேசி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் (செந்தில்பாலாஜி) பஸ் கட்டண உயர்வை பற்றி விமர்சித்து பேசினார். அவர் பதவியை விட்டு விலகும் போது போக்குவரத்து துறையில் ரூ.5,300 கோடி கடனை விட்டு சென்றார். 60 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.1,300 கோடி நிலுவை தொகையை வைத்துவிட்டு சென்றார். அவர் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறை லாபத்தில் இயங்கியது போல பொய்யான தகவல்களை பேசி வருகிறார். இந்த அரசை துரோக அரசு என பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை. அவர் செய்த துரோகங்கள் பற்றி பலருக்கு தெரியும். அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது அவரை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்காக ஏன்? அழைத்து செல்லவில்லை என 1½ கோடி தொண்டர்கள் மனதிலும், மக்கள் மனதிலும் கேள்வி எழும்பியது. சுதந்திர தின விழா கொடியேற்றத்தின் போது ஜெயலலிதா நிற்க முடியாமல் 3 தடவை உட்கார்ந்து எழுந்தார். அப்போதே அவரது உடல் நிலை சரியில்லை என தெரிந்தபோது 33 வருடங்களாக ஜெயலலிதா உடன் இருந்தவர் (சசிகலா) ஏன்? அவரை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு நல்ல மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை.
மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் லண்டன், சிங்கப்பூர் என வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று நலமுடன் திருப்பி வருகின்றனர். ஜெயலலிதாவையும் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றிருந்தால் அவர் இன்று உயிரோடு இருந்திருப்பார். 10 முதல் 15 ஆண்டுகாலம் கூடுதலாக வாழ்ந்திருப்பார். அவர் தொடர்ந்து முதல்-அமைச்சராக இருந்திருப்பார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது ராகுல் காந்தி, கவர்னர், கட்சியின் மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு நல்ல முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் நலமுடன் இருக்கிறார். அவர் நலமுடன் இருக்கட்டும். துரோகிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசுகையில், “தமிழ் மொழியை அழிக்க தேசிய கட்சிகள் முயற்சி செய்கிறது. நடிகர்கள் கட்சி ஆரம்பித்து ஊழலை ஒழிக்க போவதாக கூறி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தொடங்கி உள்ள கட்சியின் பெயரே சரியாக இல்லை. அவர் அறிமுகப்படுத்திய கொடி ஒலிம்பிக் சின்ன கொடிபோல உள்ளது. அரசியலில் சரியான அனுபவம் இல்லாதது தான் இதற்கு காரணம். இலவசங்களை கொடுக்க மாட்டோம் என்று கூறுபவர்கள் அரசின் இலவச திட்டங்களை தடுத்து நிறுத்த முடியுமா?. மத்திய அரசிடம் தமிழக அரசு என்றும் அடிபணியாது. நட்பு என்பது வேறு. தமிழர்களின் உரிமையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பரிசீலிப்பதாக பிரதமர் கூறியிருக்கிறார். இதில் காலம் தாழ்த்தினால் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெறும். சட்டரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் பா.ஜ.க.வால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.