கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு மேலும் குறைப்பு
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் அளவு மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
செங்குன்றம்,
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை வாழ் பொது மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த 4 ஏரிகளில் 11.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பூண்டி ஏரியில் சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆண்டு தோறும் ஆந்திர அரசு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். அதன்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 27-ந்தேதி திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 2-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டது.
நேற்று வினாடிக்கு 1,950 கனஅடியில் இருந்து 1,555 கனஅடியாக மேலும் குறைக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வினாடிக்கு 506 கனஅடி வீதமும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 445 கனஅடி வீதமும் வந்து கொண்டிருந்தது.
கடந்த ஜனவரி மாதம் 2-ந்தேதி முதல் நேற்று வரை பூண்டி ஏரிக்கு 1.838 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. கண்டலேறு அணையில் 68 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று அணையில் வெறும் 8.24 டி.எம்.சி. தண்ணீர்தான் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியின் நீர் மட்டம் 31.05 அடியாக பதிவானது. 1,993 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 10 கனஅடி வீதம் தண்ணீரும் திறக்கப்படுகிறது. கண்டலேறு அணையில் தற்போது 8.24 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது 7 டி.எம்.சி.க்கு குறைந்தால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.