செய்துங்கநல்லூர்-சாத்தான்குளம் பகுதியில் தண்ணீர் இன்றி 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்
செய்துங்கநல்லூர்-சாத்தான்குளம் பகுதியில் தண்ணீர் இன்றி 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
செய்துங்கநல்லூர்-சாத்தான்குளம் பகுதியில் தண்ணீர் இன்றி 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த நெற்பயிர்களை காக்க, மருதூர் அணையில் இருந்து தென்கரை குளம் உள்ளிட்ட 6 குளங்களுக்கு முறையாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கண்ணீர் மல்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், கலெக்டரின் நேர்முக உதவியார்(வேளாண்மை) முத்து எழில், உதவி கலெக்டர்கள் பிரசாந்த், அனிதா, தங்கவேலு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், செய்துங்கநல்லூர்-சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த மருதூர் மேலக்கால் பாசனத்துக்கு உட்பட்ட தென்கரை குளம் உள்ளிட்ட 6 குளங்கள் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் கோரிக்கை அட்டையை உயர்த்தி பிடித்தபடி அமர்ந்து இருந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கூறுகையில், ‘மருதூர் மேலக்கால்வாய் மூலம் தென்கரைகுளம், முதலைமொழி, நொச்சிக்குளம், கீழபுதுக்குளம், வெள்ளரிக்காயூரணி, தேமாங்குளம் ஆகிய 6 குளங்களுக்கு தண்ணீர் வருகிறது. இந்த குளங்களின் கீழ் 3 ஆயிரத்து 323 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த குளங்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றன. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தில் உள்ளன. ஆகையால் 6 குளங்களுக்கும் விரைந்து தண்ணீர் தந்து பயிர்களை காப்பாற்ற வேண்டும். மேலும், மேலக்காலில் தாதன்குளம் பகுதியில் உள்ள மதகை சிலர் முறைகேடாக திறந்து எங்கள் பகுதிக்கு வரும் தண்ணீரை வேறு குளங்களுக்கு கொண்டு சென்று விடுகின்றனர். இதனால் எங்கள் பகுதி குளங்கள் நிரம்பாமலேயே உள்ளன. ஆகையால் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதி நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும்’ என்று பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
பயிர் காப்பீடு தொகை
தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது:-
2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகையை முழுமையாக வழங்க வேண்டும். அந்த தொகையை பகுதி பகுதியாக பிரித்து வழங்கும் போது, பலருக்கு கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது. பயிர் காப்பீடு பதிவு செய்ததில் தவறு செய்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே கூட்டுறவு சங்கத்தில் உள்ள 3 ஊர்களை சேர்ந்த விவசாயிகளுக்கு வெவ்வேறு காப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் ஒரே அளவிலான காப்பீடு தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- தாமிரபரணி ஆற்றில் இருந்து மருதூர் அணையில் 400 கனஅடி தண்ணீர் வந்தால் மட்டுமே மேலக்கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும். கடந்த சில வாரங்களாக அணைக்கு 100 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்தது. இதனால் தண்ணீர் விட முடியவில்லை. இதனால் நெல்லை மாவட்ட கலெக்டருடன் பேசி, நெல்லை மாவட்டத்தில் உள்ள 7 கால்வாய்களும் மூடப்பட்டதால் முழுமையாக 700 கன அடி தண்ணீரும் மருதூரை வந்தடைகிறது. இதனால் மேலக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு, தென்கரை குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குளம் நிறைந்த பிறகு அதன் கீழ் உள்ள 5 குளங்களும் நிரப்பப்படும். அதே நேரத்தில் இந்த குளங்களுக்கு செல்லும் தண்ணீரை முறைகேடாக வேறு குளங்களுக்கு திருப்பி விடுபவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். பயிர்காப்பீடு பிரிமியம் செலுத்துவதற்கான வரையறைகளை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம், தொழிற்சாலை கழிவுகளை வெளியில் விட்டதாக வந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு கொடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.