தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பல்

தீ விபத்தில் குடிசை எரிந்து சாம்பல் இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

Update: 2018-02-28 22:00 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பெரியசாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 62). விவசாயியான இவர் வயலில் குடிசை அமைத்து தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கராசு நேற்று வீட்டை பூட்டி விட்டு வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென தங்கராசுவின் குடிசையில் இருந்து கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் குடிசை முழுவதும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டினுள் வைத்திருந்த ரேஷன் அட்டை, பத்திரம் முதலிய ஆவணங்கள் மற்றும் ரூ.50 ஆயிரம், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை எரிந்து நாசமானது. இதுகுறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்