தாய், சகோதரியை தாக்கி மாணவர் கொலை: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி
தாய், சகோதரியை தாக்கி மாணவரை கொலை செய்த குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.
புதுச்சேரி,
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி ஆராயி (வயது 45). இவர்களுக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். ஏழுமலை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மூத்த மகன்கள் 3 பேரும் பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகின்றனர். மூத்த மகள் திருப்பூரில் வேலை செய்து வருகிறார்.
ஆராயி மற்றும் இளைய மகள் தனம்(15), மகன் சமயன்(8) ஆகியோர் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் வசித்து வந்தனர். தனம் 8-ம் வகுப்பும், சமயன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி இரவு ஒரு மர்ம கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்து ஆராயி, தனம், சமயன் ஆகிய 3 பேரையும் சரமாரியாக தாக்கியது.
இதில் சமயம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மற்ற 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆராயிக்கு நேற்று முன்தினம் இரவு சுயநினைவு திரும்பியது. ஆனால் அவரால் இன்னும் பேச முடியவில்லை. மகள் தனத்திற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று மதியம் ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ஆராயி, தனம் ஆகிய 2 பேரையும் பார்த்தார்.
பின்னர் டாக்டர்களை சந்தித்து அவர்கள் 2 பேருக்கும் அளித்து வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி நிதிஉதவி வழங்கினார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், வானூர் தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணி, விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், வானூர் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இது குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியதாவது:-
மர்ம கும்பலால் தாக்கப்பட்ட 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விரைவில் குணமடைவார்கள். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். ஏற்கனவே இது போல் வேறு இடங்களில் 2 தாக்குதல் சம்பவங்கள் நடத்திருப்பது தற்போது அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.