பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது: 18,171 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் கலெக்டர் தகவல்
நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 18 ஆயிரத்து 171 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் என்று கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் செய்திகுறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. நாகை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 789 மாணவர்களும், 10 ஆயிரத்து 382 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 171 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக நாகை கல்வி மாவட்டத்தில் 30 மையங்களும், மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் 31 மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.
தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை வசதி, கழிவறை வசதி, தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் தலைமையாசிரியர்கள் 80 பேரும், ஆசிரியர்கள் 1,082 பேரும், அலுவலக பணியாளர்கள் 280பேரும், 156 போலீசார் என மொத்தம் 1,598 நபர்கள் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர்.தேர்வுகளை கண்காணிப்பதற்காக 64 நிலையான படைகளும், 18 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் 28 பேருக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வு எழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் தேர்வர்கள் கண்டறியப்பட்டால்,அன்றைய தேர்வினை தொடர்ந்து எழுத இயலாது. ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளித்தேர்வு மையத்தினை ரத்து செய்யவும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.