நாகையில் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாகையில் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் வள்ளுவன் பேசினார். தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் நிலைய பணியாளர்களை உடனே நியமிக்காததை கண்டிப்பது. கொள்முதல் ஊழியர்களின் மாத ஊதியம், ஊதிய நிலுவை தொகை, கருணை தொகை ஆகியவற்றை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.
நடவடிக்கை
நடப்பு கொள்முதல் பருவத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளப்படி கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கான பணத்தை 3 நாட்களுக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க சேமிப்பு நிலையங்களை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன. இதில் சங்க மாவட்ட செயலாளர் தம்பித்துரை, சங்கத்தை சேர்ந்த பொன்.நக்கீரன், பாஸ்கரன், சுப்புரத்தினம், ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தை சேர்ந்த இளமாறன் நன்றி கூறினார்.