ஈரோட்டில் நடைபெறும் மாநாட்டில் திரளானோர் பங்கேற்க வேண்டும் தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

ஈரோட்டில் நடை பெறும் மாநாட்டில் திரளானோர்பங்கேற்க வேண்டும் என தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

Update: 2018-02-28 22:45 GMT
முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூரில் தி.மு.க. ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஒன்றிய செயலாளர் மனோகரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் கொடியேற்றி இனிப்புகள் நலத்திட்ட உதவிகளும் வழங்கி கொண்டாடுவது.

அதிகளவில் விபத்துக்கள் நடந்து வருவதை தடுக்கும் வகையில் முத்துப்பேட்டை வழியாக செல்லும் தூத்துக்குடி-நாகை கிழக்கு கடற்கரை சாலையை நான்குவழி சாலையாக மாற்ற வேண்டும். ஈரோட்டில் நடைபெறும் தி.மு.க. மாநாட்டிற்கு முத்துப்பேட்டை ஒன்றியத்தில் இருந்து அதிகளவில் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், கண்ணன், கோவிந்தராஜ், ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன், முத்துலெட்சுமிசிவா, பாலசுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி அமைப் பாளர் விஜயன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்