மூதாட்டியை கொன்று நகை பணம் கொள்ளை
ஓசூரில் பட்டப்பகலில் மூதாட்டியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூரில் பட்டப்பகலில் துணிகரம்:
மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளை
மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
கொலை நடந்த வீட்டின் முன்பு பொதுமக்கள் திரண்டிருந்ததை படத்தில் காணலாம்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி அருகே உள்ள கோவிந்த அக்ரஹாரம் ராஜாஜி லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (வயது 35). இவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். ரமேசின் தந்தை சிக்கோன் (75). தாயார் மாதம்மாள் (70).
இந்த நிலையில் ரமேசும், அவருடைய மனைவியும் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்றுவிட்டனர். குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். மேலும் சிக்கோனும் வெளியே சென்றிருந்தார். இதனால் மூதாட்டி மாதம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் மதியம் ரமேசின் வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாதம்மாள் கூச்சலிட்டார். இதையடுத்து மர்ம ஆசாமிகள் மாதம்மாளின் கை, கால்களை கட்டிப்போட்டு துணியால் கழுத்தை இறுக்கி அவரை கொலை செய்தனர். பின்னர் அவர்கள் வீட்டில் இருந்த 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம், வெள்ளி பொருட்கள் மற்றும் எல்.இ.டி. டி.வி., கிரைண்டர் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த நிலையில் மாலையில் ரமேசின் 2 குழந்தைகளும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தனர். அப்போது பாட்டி மாதம்மாள் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதனர். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அங்கு மாதம்மாள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இது குறித்து ரமேசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது தொடர்பாக ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதைத் தொடர்ந்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகார்த்திக்ராஜ் மற்றும் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓசூரில் பட்டப்பகலில் மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.