கிரானைட் முறைகேடு வழக்கு: மேலூர் கோர்ட்டில் கிராம அதிகாரி சாட்சியம்

மேலூர் கோர்ட்டில் கிரானைட் வழக்கில் கிராம நிர்வாக அதிகாரி சாட்சியம் அளித்தார்.

Update: 2018-02-28 21:45 GMT
மேலூர்,

மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்தான வழக்கு விசாரணைகள் மேலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தனியார் இடங்களில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதிகோரி அப்போதைய மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் தொடர்ந்த 18 வழக்குகள் மற்றும் போலீசார் தொடர்ந்த 5 வழக்குகள்ஆகியவற்றின் மீதான விசாரணை நேற்று மேலூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பழனிவேல் முன்பு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஷீலா ஆஜரானார்.

கீழையூரில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க அனுமதிகோரி பி.ஆர்.பழனிசாமி மீது கலெக்டர் தொடர்ந்த வழக்கில் அப்போதைய கீழையூர் கிராம நிர்வாக அதிகாரி ரவிச்சந்திர பிரபு அரசுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தார். விசாரணைக்கு பின்னர் மொத்தம் 23 வழக்குகளின் விசாரணையை அடுத்த மாதம் 16 மற்றும் 18-ந்தேதிக்கு மாஜிஸ்திரேட்டு தள்ளிவைத்தார்.

போலீசார் பறிமுதல் செய்த பாஸ்போர்ட்டுகளை திரும்ப ஒப்படைக்கவேண்டி பி.கே.எம். செல்வம் ஏற்கனவே மேலூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை அவர் நேற்று வாபஸ் பெற்று கொண்டார்.

மேலும் செய்திகள்