தஞ்சையில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து பேனர் கிழிப்பு தி.மு.க.வினர் திரண்டு வந்ததால் பரபரப்பு
தஞ்சையில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து தி.மு.க.வினர் திரண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா இன்று(வியாழக்கிழமை) தி.மு.க.வினரால் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடப்பட உள்ளது. பிறந்தநாளையொட்டி இளைஞரணி, மாணவரணி மற்றும் பல்வேறு அணியினர் சார்பில் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை காந்தி சாலை, எம்.கே.மூப்பனார் சாலை, மேலவீதி, தெற்கு வீதி, கீழவாசல் உள்பட முக்கியமான சாலைகளில் தி.மு.க.வினர் சார்பில் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பேனர் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் எதிரில் 19–வது வட்ட தி.மு.க. மற்றும் மாநகர மாணவரணி, இளைஞரணி சார்பில் 2 பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர், இந்த 2 பேனர்களையும் கிழித்து விட்டு சென்று விட்டனர்.
பேனர்கள் கிழிக்கப்பட்டு இருந்ததை நேற்று காலையில் பார்த்த தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் மாநகர செயலாளர் நீலமேகம், துணை செயலாளர் நீலகண்டன், வட்ட செயலாளர்கள் தெய்வநாயகம், மதி மற்றும் தி.மு.க. தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க.வினர் திரண்ட தகவல் அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அங்கு கூடி நின்ற தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், மு.க.ஸ்டாலினை வாழ்த்தி வைத்திருந்த பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலவீதி மூலை அனுமார் கோவில் எதிரே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கேமராவில் பேனரை கிழித்தவர்களின் உருவம் எதுவும் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் பார்வையிட முடிவு செய்தனர். ஆனால் அந்த கேமரா கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருப்பது தெரிய வந்தது.
இந்த கேமரா செயல்பாட்டில் இருந்திருந்தால் பேனரை கிழித்தவர்களின் உருவம் பதிவாகி இருக்கும். அதை வைத்து எளிதாக அவர்களை போலீசார் கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் கேமரா செயல்படாததால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.