பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை ரெயிலடியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-02-28 22:45 GMT
தஞ்சாவூர்,


தஞ்சை ரெயிலடியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சிவப்பிரியா, நகர செயலாளர் ராஜன், மாவட்ட துணைத் தலைவர் சங்கிலிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் டிக்கெட் எடுக்கும்போது ஏற்படக்கூடிய சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சக்கர நாற்காலி வசதி செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓய்வு எடுக்க தனியாக அறை அமைத்து கொடுக்க வேண்டும். இலவச கழிப்பறை கட்டி கொடுக்க வேண்டும். பேட்டரி கார் வசதி செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் ரெயில் பெட்டிகள் பற்றி தெளிவான அறிவிப்பு செய்ய வேண்டும். ரெயில் நிலைய அளவிலான நலன் கமிட்டியில் மாற்றுத்திறனாளிகளையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்ட நிர்வாகிகள் கணேசன், சதாசிவம், கிருஷ்ணமூர்த்தி, முகமதுராவுத்தர், மோகன், சேகர், சரவணன், வடிவேல், கிருஷ்ட்டி, அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் லாரன்ஸ்சேவியர் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்