மனைவி, குழந்தைகளை பார்க்க வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் டிராக்டர் மோதி பலி

மனைவி, குழந்தைகளை பார்க்க வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் டிராக்டர் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2018-02-28 21:30 GMT
கமுதி,

கமுதி அருகே உள்ள தோப்படைபட்டியை சேர்ந்த தர்மதுரை என்பவருடைய மகன் செந்தில் (வயது36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த செந்தில் மனைவி, குழந்தைகளை பார்க்க நேற்று காலை ஊர் திரும்பினார்.

பின்னர் நண்பர்களை பார்க்க மோட்டார் சைக்கிளில் கமுதிக்கு சென்றார். அங்கிருந்து வீட்டுக்கு திரும்பியபோது செங்கற்படை புதுக்கோட்டை அருகே அந்த வழியாக வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் கமுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்கரபாணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகநாதன், மவுலானா உள்பட போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தோப்படைபட்டியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் தெய்வேந்திரனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்