புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா
பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக சென்று தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினார்கள்.
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டின் திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சக்திகரகம் அழைத்தலும், அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று பாலக்கோடு தாலுகா அலுவலகம் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
சில பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு கிரேனில் தொங்கியபடி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவில் வளாகத்தை சென்றடைந்தது. அங்கு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதேபோல் பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர்.
விழாவையொட்டி நூற்றுக்கணக்கான ஆடுகள், கோழிகளை பலியிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த திருவிழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நேற்று பாலக்கோடு தாலுகாவிற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று(வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு இரவில் பட்டிமன்றம், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், இசைகச்சேரி ஆகியவை நடத்தப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், புதூர் பொன்மாரியம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து உள்ளனர்.