பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி விருத்தாசலம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி விருத்தாசலம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-28 22:00 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் ஜனநாயக விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி தலைமையில் கார்மாங்குடி வெங்கடேசன், ராமர் ஆகியோர் முன்னிலையில் நேற்று ஏராளமான விவசாயிகள் விருத்தாசலம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த வேளாண்மை உதவி இயக்குனர் ரமேஷ், விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், விருத்தாசலம் ஒன்றியத்தில் நெல் மற்றும் உளுந்து பயிருக்கு மொத்தம் 4 ஆயிரத்து 51 விவசாயிகள் காப்பீட்டு தொகை செலுத்தி உள்ளனர். அவர்களில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டஈட்டு தொகை வங்கிகளுக்கு வந்தது. அதில் விவசாயிகள் கொடுத்த வங்கி கணக்குகளில் வரவு வைக்க முடியாமல், பணம் திரும்பி சென்றுவிட்டது.

ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே உளுந்து பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வரவேண்டியுள்ளது. இதுவரை பயிர் காப்பீட்டுத்தொகை கிடைக் காத விவசாயிகள் உடனடியாக ஆதார் எண் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை உதவி வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைத்தால், விரைவில் நடவடிக்கை காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனை ஏற்ற விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்