ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே உள்ள பள்ளவிளை பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24). இவர் மீது ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பிரசாந்த், குற்றசெயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவுசெய்தனர். இதற்கான அனுமதி கோரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் ஒப்புதல் அளித்ததை அடுத்து நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலட்சுமி, பிரசாந்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
கொல்லங்கோடு அருகே உள்ள கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுஜிஸ்குமார் என்ற சுதீஸ் (32). இவர் மீது, கள்ள சாராயம் காய்ச்சுதல் மற்றும் கடத்துதல் தொடர்பாக தக்கலை மதுஒழிப்பு பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி சுதீஸ் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. எனவே, சுதீசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து சுதீசை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதுபோல், நாகர்கோவில் கோட்டார் கேப்ரோட்டை சேர்ந்த சூர்யா என்கிற தளபதி சூர்யா(22), ராஜகணேஷ் என்கிற ராஜூ(24) ஆகியோரை கோட்டார் போலீசார் குண்டர் சட்டத்தில் கைதுசெய்தனர். இவர்கள் இருவரின் மீதும், கோட்டார், சுசீந்திரம் போலீஸ் நிலையங்களில் கொலைமுயற்சி, கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பல்வேறு வழக்குகள் உள்ளது.
சுசீந்திரம் மணிக்கட்டிபொட்டல் அருகே உள்ள சீயோன்புரத்தை சேர்ந்த ஜான்ஆல்வின் பிரபு என்கிற பிரபு(28) என்பவரை சுசீந்திரம் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவர் மீதும் கோட்டார் மற்றும் சுசீந்திரம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் ஒரே நாளில் கைது செய்யப்பட்ட 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.