விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க குமரி மாவட்டக்குழு சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க குமரி மாவட்டக்குழு சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும், தினக்கூலியாக ரூ.205 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் மலைவிளைபாசி தலைமை தாங்கினார். சிவானந்தம், சாகுல் அமீது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசுவாமி கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினார். முடிவில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் அமிர்தலிங்கம் நிறைவுரையாற்றினர்.