வீட்டில் தனியாக இருந்த 2 பெண்கள் குத்திக்கொலை போலீசார் தீவிர விசாரணை
புனேயில் வீட்டில் தனியாக இருந்த 2 பெண்கள் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
புனே,
புனேயில் வீட்டில் தனியாக இருந்த 2 பெண்கள் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூட்டிய வீட்டுக்குள்...
புனே, சிருர் தாலுகா சிரஸ்காவ் காடா பகுதியை சேர்ந்த பெண் வட்சலா(வயது63). இவரது வீட்டில் கிசான்(60) என்ற பெண் தங்கியிருந்து வீட்டு வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வட்சலாவின் வீடு மாலை வரை பூட்டியே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டிற்குள் வட்சலாவும், வேலைக்கார பெண் கிசானும் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களது வயிற்றில் பலத்த கத்திக்குத்து காயங்கள் இருந்தது.
குத்திக்கொலை
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனியாக வீட்டில் இருந்த 2 பெண்களையும் கத்தியால் குத்தி கொலை செய்தது யார்?, காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த வீட்டில் பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. எனவே நகை, பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பு இல்லை என போலீசார் கூறினர்.