ஜோகேஸ்வரியில் போலீஸ்காரர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை

ஜோகேஸ்வரியில் போலீஸ்காரர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-02-27 22:30 GMT
மும்பை,

ஜோகேஸ்வரியில் போலீஸ்காரர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்கில் தொங்கினார்

மும்பை ஜோகேஸ்வரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ் வாக். இவர் அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் புஷன் வாக்(வயது28). இந்தநிலையில் நேற்று மதியம் 12.15 மணியளவில் புஷன் வாக் வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த மேக்வாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷன் வாக்கை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்கொலை

இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், புஷன் வாக் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும் அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்