விவசாயிகள் பிரச்சினையில் எதிர்க்கட்சியினர் அமளி மராட்டிய மேல்-சபை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
விவசாயிகள் பிரச்சினைகளை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மராட்டிய மேல்-சபை நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மும்பை,

மராட்டிய மேல்சபை நேற்று கூடியதும் எதிர்பார்த்தது போலவே விவசாயிகளின் பிரச்சினைகளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தனஞ்செய் முண்டே கையில் எடுத்தார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:-
பயிர்க்கடன்
அரசு ரூ. 34 ஆயிரம் கோடிக்கு விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்தது. ஆனால் மோசமான முறையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக அனைத்து பயனாளிகளுக்கும் இதுவரை பயிர்க்கடன் சென்று சேரவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடியால் பயன்பெறும் 36 மாவட்டங்களில் 17 மாவட்டங்களை சேர்ந்த ஒரே ஒரு விவசாயி கூட இந்த கடன் தள்ளுபடியை பெறவில்லை என்பது நாங்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
பயிர்க்கடன் தள்ளுபடியால் பயன்பெற்ற 31 லட்சம் விவசாயிகளின் பட்டியலை அரசு சபை முன் தாக்கல் செய்யவேண்டும்.
குற்றவாளிகளை போல்...
இதேபோல் கடந்த டிசம்பர் மாதம் இளச்சிவப்பு புழுக்களால் பயிர்கள் சேதமடைந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்குவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் உஸ்மனாபாத் மாவட்ட நிர்வாகம் ஆலங்கட்டி மழையால் பயிர்களை இழந்த விவசாயிகள் நிவாரணம் பெற தங்கள் நிலத்தில் கரும்பலகையுடன் நின்று போட்டோ எடுத்து அனுப்புமாறு உத்தரவிட்டிருந்து குறித்து மேல்-சபையில் கடுமையாக விமர்சித்தார். அரசு விவசாயிகளை குற்றவாளிகளை போல் கையில் பெயர்பலகையுடன் நிற்கவைத்து வேடிக்கை பார்ப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த விவசாயிகள் பிரச்சினை குறித்தும் விவாதம் நடத்தவேண்டும் எனவும் தனஞ்செய் முண்டே வலியுறுத்தினார்.
நாள் முழுவதும் ஒத்திவைப்பு
அப்போது மேல்-சபை தலைவர், கேள்வி நேரத்தில் இதுகுறித்து விவாதிக்கலாம் என்று கூறினார். இதை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சியினர் இதுகுறித்து முழுநாள் விவாதம் வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
எவ்வளவு சமாதானப்படுத்தியும் கூச்சல், குழப்பம் தொடர்ந்து நீடித்ததால் மேல்-சபை தலைவர் கூட்டத்தை 20 நிமிடங்கள் ஒத்திவைத்தார். ஆனால் மீண்டும் சபை கூடியபோது தொடர்ந்து அமளி நீடித்தது. ஆளும் கட்சியை சேர்ந்த பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் கோஷம் எழுப்பினர். இதையடுத்து சபை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.