எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலையத்தில் ராணுவம் கட்டிய புதிய நடைமேம்பாலம் திறப்பு
எல்பின்ஸ்டன் ரோடு ரெயில் நிலையத்தில் ராணுவம் கட்டிய புதிய நடைமேம்பாலம் பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
மும்பை,

நடைமேம்பாலங்கள் திறப்பு
மும்பை எல்பின்ஸ்டன் ரோடு- பரேல் ரெயில்நிலையங்களை இணைக்கும் குறுகிய நடைமேம்பாலத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை அடுத்து எல்பின்ஸ்டன் ரோடு ரெயில்நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் ஒன்று ராணுவம் சார்பில் கட்டப்பட்டது. இதுதவிர கரிரோடு, அம்பிவிலி ரெயில்நிலையங்களிலும் ராணுவம் சார்பில் நடைமேம்பாலங்கள் கட்டப்பட்டு வந்தது.
இந்த பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இந்தநிலையில் இந்த புதிய பாலங்களை திறந்து வைக்கும் விழா நேற்று நடந்தது.
பரேல் ரெயில்நிலையத்தில் நடந்த இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி தேவேந்திரபட்னாவிஸ், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், ராணுவ இணை மந்திரி சுபாஷ்பாம்ரே ஆகியோர் மின்சார ரெயிலில் வந்து இறங்கினார்கள். பின்னர் அங்கு நடந்த விழாவில் கலந்துகொண்டு புதிய நடைமேம்பாலங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
ஆவணங்கள் ஒப்படைப்பு
முன்னதாக சி.எஸ்.எம்.டி.யில் நடந்த நிகழ்ச்சியில், மும்பை- ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள மாநில அரசுக்கு சொந்தமான இடத்தை ரெயில்வேக்கு வழங்கியதற்கான ஆவணங்களை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல் ஆகியோர் முன்னிலையில் மாநில அரசு அதிகாரிகள் ரெயில்வே அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.