சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் பிரதமர் மோடி
சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பிரதமர் நரேந்திர மோடி பொய்குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்று வீரப்ப மொய்லி எம்.பி. கூறினார்.
மைசூரு,

அரசியல் லாபத்திற்காக...
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், தற்போது பாராளுமன்ற உறுப்பினரும், கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குழு தலைவருமான வீரப்ப மொய்லி நேற்று மைசூருவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி அரசியல் லாபத்திற்காக நாட்டின் எதிர்காலத்தையே அடகு வைத்து கொண்டிருக்கிறார். பொறுப்பில்லாத ஆட்சி மத்தியில் இருப்பதால் நாட்டில் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றை தன்வசம் வைத்துக் கொண்டு அரசியல் லாபத்திற்காக அவற்றை பயன்படுத்தி வருகிறார்.
தேர்தல் நோய்
இப்போது பா.ஜனதாவினருக்கு தேர்தல் நோய் வந்துள்ளது. அதனால்தான் அவர்கள் எந்த ஒரு முறைகேட்டைப் பற்றியும் கவலைப்படாமல் உள்ளனர். குறிப்பாக மைசூரு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு பற்றி கூட அவர்கள் சட்டமன்றத்தில் பேசவில்லை.
இனிவரும் சட்டமன்ற கூட்டங்களில் நானே இதுபற்றி பேசி பிரச்சினையை கிளப்புவேன். சித்தராமையா தலைமையிலான ஆட்சியில் 98 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன. ஆனால் பிரதமர் மோடி பதவி ஏற்று 4 ஆண்டுகள் ஆனபோதிலும், இதுவரையில் அவர் அறிவித்த ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.
கருப்பு பணம்
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவேன், அதைக்கொண்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சத்தை போடுவேன் என்று அறிவித்தார். ஆனால் அவர் கருப்பு பணத்தை மீட்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவர் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். நாட்டில் வேலை வாய்ப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது. சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.), பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
கடும் சரிவை சந்திக்கும்
இன்னும் 2 ஆண்டுகளில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையும் என்று அவர் கூறி வருகிறார். ஆனால் நாட்டின் பொருளாதாரம் இன்னும் 2 ஆண்டுகளில் இப்போது உள்ளதை விட கடும் சரிவை சந்திக்கும்.
காங்கிரஸ் ஆட்சியால் கர்நாடக மாநிலம் நாட்டில் முதன்மை மாநிலமாக உயர்ந்துள்ளது. மேலும் அதற்காக பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. இப்படிப்பட்ட, சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பிரதமர் நரேந்திர மோடி அபாண்டமாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.
மக்கள் முடிவு கட்டுவார்கள்
முதல்-மந்திரி சித்தராமையா கூறியதுபோல் மத்திய அரசு 90 சதவீத கமிஷன் அரசுதான். நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதற்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள்.
இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.