தட்டுப்பாடு இன்றி மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர்கள் போராட்டம்

தமிழக கட்டிட தொழிலாளர்கள், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் ஆகியவை சார்பில் திருச்சி திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-02-27 22:45 GMT
திருச்சி,

தமிழக கட்டிட தொழிலாளர்கள், தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் ஆகியவை சார்பில் திருச்சி திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு செயலாளர் மாலைத்துரை வரவேற்று பேசினார். தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க நிறுவன தலைவர் பொன்.குமார் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் ஒரு கோடி கட்டிட தொழிலாளர்கள் உள்ளனர். மணல் கிடைக்காத காரணத்தால் இவர்கள் ஒரு வருடமாக வேலை இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே கட்டுமான பணிக்கு தட்டுப்பாடு இன்றி மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 4 யூனிட் மணல் ரூ.7 ஆயிரத்திற்கு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. 

மேலும் செய்திகள்