113 தேர்வு மையங்களில் 43 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
சேலம் மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ்-2 பரீட்சையை 113 மையங்களில் 43 ஆயிரம் மாணவர்கள் எழுதுகிறார்கள்.
சேலம்,
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதிவரை நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 113 தேர்வு மையங்களில் 40,645 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதுதவிர தனித்தேர்வர்களாக 2,400 பேர் தேர்வெழுத உள்ளனர். ஆக மொத்தம் 43 ஆயிரத்து 45 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுக்காக 16 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இரட்டைப் பூட்டு முறையில் இரு காப்பாளர்கள் வீதம் நியமனம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவை இன்று (புதன்கிழமை) மாலை அனைத்து தேர்வு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
அதுபோல விடைத்தாள்களும் அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. அவற்றை அப்பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் நேற்று சரிபார்த்தனர். மேலும் அரசு பள்ளிகளில் பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன.
தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்விடங்களில் அந்நியர் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. இவ்விதிகளை மீறுவோர் மீது, காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் தண்டனைப் பற்றிய சுவரொட்டி தேர்வு மையங்களில் ஒட்டப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல் நாளில் தமிழ் முதல்தாள் தேர்வு நடக்கிறது. தேர்வு 3 மணி நேரம் நடக்கிறது. அதாவது காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1.15 மணிவரை நடக்கிறது. 15 நிமிடம் வினாத்தாள் படித்து பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் செம்மையாக நடைபெறுவதை உறுதிபடுத்துவதற்கும், தீவிரமாக கண்காணிப்பதற்கும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்ட தேர்வுக்குழுவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர், ஊர்க்காவல்படை தலைவர், கல்வித்துறை அலுவலர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
தேர்வுகளில் முறைகேடுகள், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றைக் கண்காணிப்பதற்கு உதவி கலெக்டர்கள், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் சங்ககிரி, சேலம் மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையிலும், சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித பதற்றமும் அடைய தேவையில்லை என்று வகுப்பு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். அதற்காக காலை 9 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்து விட வேண்டும் என்றும், 9.45 மணிக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு சரியாக 10 மணிக்கு வினாத்தாள், விடைத்தாள் கொடுக்கப்பட்டு தேர்வு தொடங்குகிறது.
மேலும் மாணவர்கள் எவ்வித மன அழுத்தமும் இல்லாமல் தேர்வு எழுதுவதற்கு முன்னதாகவே தயார் செய்யும் வகையில் தேர்வு முடிவு தேதியும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 16-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.