திருப்புவனத்தில் வாரச்சந்தை கடைகள் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கையால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
திருப்புவனத்தில் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்ட வாரச்சந்தை கடைகளை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுத்ததால் தற்போது போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
திருப்புவனம்,
திருப்புவனத்தில் இருந்து சிவகங்கை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் அருகில் 2 நாட்கள் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். செவ்வாய்க்கிழமை ஆடு, கோழி மற்றும் காய்கறி விற்பனை சந்தைகள் நடைபெறும். மறுநாள் புதன்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறும். செவ்வாய்க்கிழமை நடைபெறும் காய்கறி சந்தையில் பெரிய வியாபாரிகள் சந்தையினுள் செட் அமைத்தும், சிறிய வியாபாரிகள் தற்காலிக பந்தல் அமைத்தும் தங்களது பொருட்களை விற்பனை செய்வார்கள். இதில் பலர் சந்தை கூடத்தில் பொருட்களை விற்பனை செய்யாமல் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்து பொருட்களை விற்பனை செய்து வந்தனர். மேலும் கிராமப்புறங்களை சேர்ந்த விவசாயிகளும் தங்களது தோட்டங்களில் விளையும் காய்கறி, கீரை வகைகளை தேசிய நெடுஞ்சாலையோரம் கடை அமைத்து விற்பனை செய்வார்கள். நேரம் செல்ல, செல்ல சந்தை கூடத்திற்கு வெளியே சாலையோரத்தில் விற்பனை செய்யும் வியாபாரிகள் 3 வரிசை, 4 வரிசை என சாலையில் கடை போடுவார்கள். இதனால் பிற்பகலுக்கு மேல் சிவகங்கை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இந்த போக்குவரத்து நெரிசலால் அரசு பஸ்கள், வேன், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படும். மேலும் வாரச்சந்தை அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், தனியார் பள்ளி மாணவ-மாணவிகளும் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதுதவிர கிராமப்புறங்களில் இருந்து வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்கள் பஸ் ஏற முடியாமலும், தங்களது வாகனங்களில் செல்லமுடியாமலும் பாதிப்படைந்து வந்தனர். இதேபோல் மடப்புரம் கோவிலுக்கு கார், மோட்டார் சைக்கிளில் செல்லும் பக்தர்களும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் வாரச்சந்தை கடைகளை சாலையோரம் அமைக்க தடை விதித்து, அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 3 வாரங்களாக திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து வாரச்சந்தை சில்லரை வியாபாரி முதல் பெரிய வியாபாரிகள் வரை சந்தைக்கு உள்ளேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதித்தனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனைத்தொடர்ந்து தற்போது வியாபாரிகள் அனைவரும் தங்களது கடைகளை வாரச்சந்தை கூடத்திற்குள் அமைக்க தொடங்கியுள்ளனர். நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் வியாபாரிகள் சந்தை கூடத்திலேயே கடைகள் அமைத்தனர். இதனால் சிவகங்கை செல்லும் நெடுஞ்சாலை எந்தவொரு போக்குவரத்து நெரிசல் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் எளிதாக கடந்து சென்றன. இதே நிலை தொடர வேண்டும் என்று பொதுமக்கள், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.