கொளப்பள்ளியில் ஆட்டை கடித்துக்கொன்று சிறுத்தைப்புலி அட்டகாசம்
கொளப்பள்ளியில் ஆட்டை கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி பாடசாலை வீதி பகுதியில் வசித்து வருபவர் மகேசன். இவருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகைக்குள் நேற்று முன்தினம் இரவு சிறுத்தைப்புலி புகுந்தது. பின்னர் அந்த சிறுத்தைப்புலி, அங்கிருந்த சினைஆட்டை கடித்து இழுத்து சென்றது.
அந்த சத்தம் கேட்டு மகேசன் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது கொட்டகையில் இருந்த ஆட்டை காண வில்லை. அதை தேடிப்பார்த்தும் கிடைக்க வில்லை. இந்த நிலையில் அங்குள்ள புதருக்குள் நேற்று ஆட்டின் உடல் கிடந்தது. இதை அறிந்த பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வன காப்பாளர் நந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதைதொடர்ந்து கால்நடை டாக்டர் பிரபு, ஆட்டின் உடலை பரிசோதனை செய்தார். அப்போது சிறுத்தைப்புலி கடித்து ஆடு இறந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஆட்டின் உடல் புதைக்கப் பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, நாய், ஆடுகளை சிறுத்தைப்புலி கொன்று வருகிறது. எனவே அது மனிதர்களை தாக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கு முன்னதாக, அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.