போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயற்சி: சென்னை விமான நிலையத்தில் வங்காளதேச வாலிபர் கைது
போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயற்சித்த வங்காளதேச வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.;
சென்னை,
கைது செய்யப்பட்ட அந்த வாலிபரின் பெயர் ஜகதுல்லா (வயது 24). வங்காளதேச நாட்டைச்சேர்ந்தவர். இவர் துபாய்க்கு செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் விமானம் ஏற சென்றார். அப்போது அங்கே குடியுரிமை அதிகாரி ராஜ்நாராயண்சிங், ஜகதுல்லாவின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தார்.
அப்போது, அந்த பாஸ்போர்ட் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஜகதுல்லாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் போலியானது என்று கண்டறியப்பட்டது. ஜகதுல்லா மும்பையில் வசிப்பது போல், போலியான ஆவணங்களை தாக்கல் செய்து ஆதார் அட்டை, பான்கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை பெற்று வைத்திருந்தார். அதன் மூலம் பாஸ்போர்ட்டும் போலியாக வாங்கியிருப்பது தெரியவந்தது.
உடனே ஜகதுல்லாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜகதுல்லா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 2013-ம் ஆண்டே அவர் திருட்டுத்தனமாக வங்காளதேச எல்லையைக்கடந்து இந்தியாவிற்கு நுழைந்திருக்கிறார்.
பின்னர் மும்பையில் குடியேறி போலி பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றிருக்கிறார். போலி பாஸ்போர்ட்டு மூலம் துபாய்க்கு சென்று அங்குவேளையில் சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதன்பேரில் ஜகதுல்லா நேற்று கைது செய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.