குன்றத்தூர் அருகே ரவுடி கழுத்தை அறுத்து கொலை

குன்றத்தூர் அருகே முன் விரோதம் காரணமாக ரவுடி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-02-27 22:45 GMT
பூந்தமல்லி,

குன்றத்தூரை அடுத்த பழந்தண்டலம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அவரின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து அந்த வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்து கிடந்தவர் அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் என்கிற ரத்தினவேல் (வயது 22) என்பதும், ரவுடியான இவர் மீது சோமங்கலம், மணிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

பின்னர் ரத்தினத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு ரத்தினத்துக்கும், மற்றொரு ரவுடி கோஷ்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே முன்விரோதம் காரணமாக எதிர் தரப்பினர் ரத்தினத்தை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி ரத்தினத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அவருடைய உடலை இங்கு வந்து வீசி விட்டு சென்றது தெரிந்தது.

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்